Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுக்குழு கூட்டம் 

பிப்ரவரி 22, 2021 10:41

திருநெல்வேலி : கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை, தமிழக அரசு  நிரந்தரமாக கை விட வேண்டும் என திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு கிராமசுகாதார செவிலியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மாநகரை, மாநில மையமாக கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு அரசு கிராமசுகாதார செவிலியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், அண்ணாநகர் அருகில் உள்ள, ஏஞ்சலோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவி முருகம்மாள் தலைமை வகித்தார். செயலாளர் சங்கரி வரவேற்புரை நிகழ்த்தினார்.  

இக்கூட்டத்தில்,  மாநில தலைவி நிர்மலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, உரை நிகழ்த்தினார். மாவட்ட துணை தலைவி மங்கையர்க்கரசி நன்றி கூறினார்.  

கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம், கொசவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்த, நீலாவதி, தற்கொலை செய்து, தனது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு, பணிநெருக்கடி கொடுத்த, உயர் அலுவலர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த நீலாவதியின் குடும்பத்திற்கு, ஐம்பது லட்சம் ரூபாய், இழப்பீட்டுத் தொகையாக, வழங்கிட வேண்டும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு, அரசுப்பணி வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இரண்டாம்நிலை செவிலியர்களுக்கு, குறைந்த பட்ச மாத ஊதியமாக பதினைந்து ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும், அலுவலக பதிவேடுகளை, அந்தந்த துறையினரே தயாரித்து தரவேண்டும், ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும் ஆகியன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச்செய்திகள்