Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்சியர் அலுவலகம் முன்பு  குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற  பெண்

பிப்ரவரி 22, 2021 10:42

ராமநாதபுரம் : ஆட்சியர்   அலுவலகம் முன்பு கணவன் வீட்டாரின் துன்புறுத்தலால் மனமுடைந்த  பெண் ஒருவர் தனது இரு  குழந்தைகளுடன் மண்ணெண்ணெய்யை ஊற்றி  தீக்குளிக்க முயற்சி செய்ததை  காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்  3 பேரும் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் கே.கே.நகரில்  காமராஜ்-ரூபெல்லா தம்பதியினர் இரு பெண்குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். காமராஜின் அண்ணன், காமராஜின் சகோதரி, மற்றும் தாயார் ஆகியோர் ரூபெல்லாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ரூபெல்லா புகார் தெரிவித்துள்ளார். 

புகார் குறித்து  முறையான நடவடிக்கை  போலீசார் எடுக்கவில்லை.  பின்னர் மீண்டும் தொடர்ந்து ரூபெல்லாவை  கணவன் வீட்டார் அச்சுருத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரூபெல்லா தனது இரு பெண்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த கேனில் உள்ள  மண்ணெண்ணெயை உடலில் ஊற்ற முயற்சித்த போது அங்கிருந்த போலீசார் தடுத்தனர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்