Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருக்குறளை இந்திய தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - எழுதமிழ் இயக்கம்

பிப்ரவரி 22, 2021 10:44

திருச்சி : திருக்குறளை இந்திய தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என  எழுதமிழ் இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுளளது.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருச்சியில் எழுதமிழ் இயக்கம் சார்பாக தமிழ் தாய் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்வில்  திருக்குறளை இந்திய தேசிய நூலாக இந்திய அரசு அறிவித்து திருக்குறளை

பரப்ப வேண்டும்,  அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் இந்திய அரசின் நவோதயா பள்ளிகள் அனைத்திலும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில், நூலகங்களில் தமிழ் நாட்டு வரலாற்று சுவடுகள், சுவடிகள், சிலைகள்

நூல்கள் பதிவுகளாக உள்ளது அவைகளை உரிய சான்றுகளுடன் சாட்சிகளுடன் தமிழக அரசு பதிவு செய்து நூல்களாக காணொளிகளாக உலக மக்களுக்கு வழங்க வேண்டும் மற்றும்  தமிழக அரசு மாமன்னன் ராஜராஜ சோழனைப் பெருமைப்படுத்தும் விதமாக மகாராஷ்டிராவில் சத்ரபதி

சிவாஜிக்கு கொண்டாடியதைப் போல் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றபட்டது. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சாருபாலா தொண்டைமான், ரவீந்திரன், முருகானந்தம்,  வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தலைப்புச்செய்திகள்