Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.6,683 கோடியில் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம்

பிப்ரவரி 23, 2021 12:33

சென்னை:தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அதில் அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பஸ்கள் மின்சார பஸ்களாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ. 1,580 கோடியில் 2,200 பி.எஸ்-6 பஸ்களும், 500 மின்சார பஸ்களும் கொள்முதல் செய்யப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2021- 22-ம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில், மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று மத்திய நிதி மந்திரி தனது வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.இத்துடன் இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஆதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்