Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது

பிப்ரவரி 24, 2021 03:59

சென்னை:போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.அண்ணா தொழிற்சங்கம், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நாளைக்கு வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்களை இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

தொழிற்சங்க விதிப்படி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டுமானால் முறையான நோட்டீஸ் கொடுத்து, கால அவகாச இடைவேளைக்கு பிறகுதான் போராட முடியும். ஆனால் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறாகும்.எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தமிழ்நாடு முழுவதும் பஸ்களை இயக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

என்று கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்