Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.பி.எஸ்,ஓ.பி.எஸ் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பிப்ரவரி 24, 2021 04:03

சென்னை:மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதையொட்டி இன்று காலை தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக தலைமை கழகத்திற்கு வந்து இருந்தனர்.

அங்குள்ள ஜெயலலிதா சிலை வளாகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் மருத்துவ முகாமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பின்னர் அங்கு ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிக் கொண்டனர். தொண்டர்களுக்கும் கேக் வழங்கினார்கள். சிறப்பு மலரும் அங்கு வெளியிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்