Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2.2 கோடி மதிப்பிலான 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

பிப்ரவரி 26, 2021 10:06

திருவனந்தபுரம்:கேரள சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து கேரள ரெயில் நிலையங்களில் வடஇந்தியாவில் இருந்து வரும் ரெயில்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ரெயில்களில் சோதனை நடத்த ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கேரளாவின் அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோழிக்கோடு ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதில் வந்த நபர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 4 கிலோ தங்க நகைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2.2 கோடியாகும். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நகைகளுக்கான ஆவணங்களை வாலிபரிடம் கேட்டனர். அவர் அளித்த ஆவணத்தை பரிசோதித்த போலீசார் அது போலி என கண்டுபிடித்தனர். அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ரமேஷ் சிங் ராஜ்வாத் எனவும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்