Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு

பிப்ரவரி 26, 2021 02:29

சேலம்:சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு ரூ.565 கோடி மதிப்பில் நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் தொடக்க விழா மேட்டூரில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.அம்மா அவர்கள் 2016-ல் தேர்தல் அறிக்கையின்போது நான் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் குறிப்பிட்டார்கள்.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பயிர்க்கடனை ரத்து செய்தார். ஒரே 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளுடைய பயிர்க்கடனை ரத்து செய்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு.எல்லோரும் தேர்தல் நேரத்தில் தான் கோரிக்கை வைப்பார்கள். அதனை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார்கள். ஆனால் அம்மாவுடைய அரசு தேர்தல் வருவதற்கு முன்பாகவே கோரிக்கை நிறைவேற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

இதேபோல் விவசாயிகள் மும்முனை மின்சாரம் வேண்டும் என்று கேட்டார்கள். இது மிக மிக முக்கியமானது. விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து எல்லாம் மக்களுக்கும் கொடுக்கப்படும். இன்னும் பல்வேறு திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்படுகின்றது.ரூ.2247 கோடி வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு.

இதுவரை தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய சரித்திரம் கிடையாது.ஆனால் நாங்கள் வழங்கி சரித்திரம் படைத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வேளாண் பெருமக்களுக்கு அதிக இழப்பீடு பெற்று தந்துள்ளோம். நீர்மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்று 2019-2020-ல் தேசிய விருது பெற்று இருக்கிறோம். என்று முதலமைச்சர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்