Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விருத்தாசலம் கோவிலில் தேரோட்டம்

பிப்ரவரி 26, 2021 03:17

கடலூர்:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடிமரங்கள், 5 தீர்த்தங்கள், 5 பிரகாரம் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளுக்கும் உற்சவம் நடைபெறும்.

 அந்த வகையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி கோவிலில் தேர் முகூர்த்தமும், ஜனவரி 25-ந்தேதி அய்யனாருக்கு காப்புகட்டுதலும், 26-ந்தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெற்று, 2-ந் தேதி பால்குடம் எடுத்தல் மற்றும் செடல் உற்சவம், தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆழத்து விநாயகருக்கு நடந்த திருவிழாவில் கடந்த 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த 17-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 22-ந்தேதி கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு ஆழத்து விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்