Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி - குண்டாறு திட்டத்துக்கு கர்நாடக அரசு  எதிர்ப்பு

பிப்ரவரி 26, 2021 03:29

கர்நாடக:''காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்குத் தமிழகம் அடிக்கல் நாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் காவிரியிலிருந்து வரும் 45 டிஎம்சி உபரி நீரைப் பயன்படுத்தத் தமிழகம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது.உபரி நீரை இருதரப்பு மாநிலங்களும் சட்டரீதியாகவோ, அதிகாரபூர்வமாகவோ பங்கீட்டுக் கொள்ளாத நிலையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சரியல்ல. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுச் சட்டத்துக்கும் எதிரானது.

நதிநீர் பங்கீட்டுச் சட்டத்தின்படி, உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து தீர்ப்பாயம் முடிவு செய்ய வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தினால் அது சட்டத்துக்கு எதிரானது, இந்தத் திட்டத்தைக் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும்.உபரி நீரை இரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது கொள்கை. ஆனால், தமிழக அரசு எதிராகச் செய்கிறது. உபரி நீரைத்தானே எடுக்கிறோம் என்கிறார்கள். தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவோம், கடுமையாக எதிர்ப்போம்.

காவிரிப் படுகையில் கர்நாடக அரசு எழுப்பிய திட்டங்களுக்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. 300 முதல் 400 ஆண்டுகளான அணைகளை மராமத்துப் பணிகள் பார்க்கக்கூட எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களுரு நகருக்குக் குடிநீர் தேவைக்காக அணை கட்ட முயன்றபோது அதற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது" என்று சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்