Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடவடிக்கை எடுக்குமா சென்னை பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்)

பிப்ரவரி 28, 2021 06:59

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (பிரஸ் கிளப்), பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த வருபவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்று சொல்லக்கூடிய பிரஸ் கிளப். இங்கு தினந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்புகள் (பிரஸ் மீட்) நடத்தப்படுவது வழக்கம்.

அதாவது முக்கிய செய்திகளை அனைத்து ஊடங்களுக்கும் கொண்டு சேர்க்க நினைப்பவர்கள் பலரும் இங்குதான் பிரஸ் மீட் நடத்துவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்க நினைப்பவர்கள் பலரும் அதற்காக தேர்வு செய்வது இந்த இடத்தைதான். 

பிரஸ் மீட் நடத்த வருபவர்கள் யார்? எதற்காக இந்த சந்திப்பு என்பது குறித்து ஒரு சிறிய குறிப்பை (பிரஸ் நோட்) பத்திரிகையாளர் மன்றத்தில் கொடுத்து அதற்கான சிறு தொகையை செலுத்துவது வழக்கம், பிரஸ் கிளப் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அதை ஊடங்களுக்கு தெரியப்படுத்துவார்கள். இதுதான் முறையாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்று கேள்விக்குறியாக உள்ளது.

அதே நேரத்தில் தற்போது பிரஸ்மீட் நடத்த வருபவர்கள் பலர்  “போயும் போயும் இங்க வந்து பிரஸ்மீட் நடத்துனோம் பாருங்க...” என்று புலம்பக்கூடிய நிலை தற்போது வந்துவிட்டது.... காரணம் கேட்டால்.. அத ஏன் கேட்குறீங்க... 50 பேர் வர்றாங்க.. அதுல 5 பேர்தான் பத்திரிகைகாரவங்க. மத்தவங்க எல்லாம் பத்திரிகைகாரவங்களே கிடையாது' என்று எரிச்சலுடன் கூறுகிறார்கள்.

அதாவது பிரஸ்கிளப்பில், பிரஸ்மீட் நடத்தி, செய்திகள் தரமாக இருந்தால் ஊடகங்களில் வெளிவரும் என்பது வருபவர்களின் எண்ணம். அதே நெரத்தில் வருபவர்கள் பத்திரிகைகாரர்களாக இருந்தால் மட்டும்தான் செயுதிகள் வரும். ஆனால் பத்திரிகை என்ற பெயரில் போலியாக சுற்றி திரிபவர்கள் வந்து இடத்தை ஆக்கிரமித்தால் செய்திகள் எப்படி ஊடகங்களில் வரும். யூடியூப் சேனலுக்கு பத்திரிகை என்கிற அங்கீகாரமே இல்லாதபோது, அவைகளை பிரஸ்கிளப் அங்கீகரிப்பது ஏன்? வருபவர்களின் அடையாள அட்டையை பார்த்து அதன்பிற்கு அவர்களை உள்ளே அனுமதிக்கலாமே? 

தினமும் எங்கெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று, நாங்களும் பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி கொள்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்குள் குழுவாக பிரிந்து ஆங்காங்கே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்களை எல்லாம் பிரஸ்கிளப் ஏன் அனுமதிக்கிறது? அப்படியென்றால் போலிகளை உருவாகுவதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றமே (பிரஸ் கிளப்) துணை நிற்கிறதா? இதுபோன்ற பல கேள்விகளை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்... 

எனவே இனிவரும் காலங்களிலாவது, போலிகளுக்கு துணை நிற்காமல், சரியான பத்திரிகையாளர்களுக்ளு உரிய அங்கீகாரம் கொடுத்து, பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தவருபவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கடமை. இதற்கான முயற்சியை சென்னை பத்திரிகையாளர் மன்றம் எடுக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்...!

தலைப்புச்செய்திகள்