Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

178 தொகுதிகளில் திமுக போட்டி?

பிப்ரவரி 28, 2021 12:11

சென்னை:திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க. கட்சிகள் உள்ளன.

அதிமுக 180 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதுபோல், திமுகவும் சுமார் 175 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 7 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக-வுக்கு தலா ஐந்து தொதிகளும், இ.யூ.மு.லீக், மனித நேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க. ஆகியவற்றிற்கு தலா 2 தொகுதிகளும், தமிழக வழ்வுரிமை கட்சிக்கு ஒரு இடங்களும் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைத்தவிர மற்ற கட்சிகளை திமுக சரிகட்டிவிடும். காங்கிரஸ் 25 தொகுதிகளை ஏற்றுக் கொண்டால் சுமார் 56 தெகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 178 தொகுதிகளில் போட்டியிட திமுக வியூகம் அமைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்