Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமி போட்டியா?

பிப்ரவரி 28, 2021 12:14

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி பா.ஜனதா தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சுதாகர் ரெட்டி, பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடி வெடுத்துள்ளோம். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

பா.ஜனதாவுக்கு என சில சட்டதிட்டங்கள் உள்ளது. கட்சி தலைமை கூட்டணி கட்சிகளுடன் பேசி எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை பேசி அறிவிக்கும். என்றார். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் நடிகை கவுதமியை வேட்பாளராக பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்