Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்க 100 நாள் பிரசாரம் -பிரதமர் மோடி 

பிப்ரவரி 28, 2021 12:19

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் பிப்ரவரி மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது;

கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். தண்ணீர் சேமிப்பு குறித்த நமது பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில், ஜல்சக்தி அமைச்சகம் மழைநீர் சேமிப்பு தொடர்பான பிரச்சாரத்தைத் தொடங்கும். 100 நாட்கள் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.என்று பிரதமர் மோடி பேசினார்.

தலைப்புச்செய்திகள்