Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டி

பிப்ரவரி 28, 2021 12:21

சென்னை: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் மாநில தலைவர் இளங்கோ யாதவ் தெரிவித்தார். 
சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் இளங்கோ யாதவ் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் யாதவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை. யாதவர் சமூகத்திற்கு 15 சதவிகிதம் ஒதிக்கீடு வழங்க கோரி கடந்த 30 வருடங்களாக போராட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கள் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு இதுவரை வழங்கவில்லை. 

இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  கூட முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம்.  எந்த பலனும் இல்லை. ஆனால் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை யாதவ சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஒரு பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பதும் யாதவர்கள்தான். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சுமார் 100 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக  அகில இந்திய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.  அகிலேஷ யாதவ் தமிழகம் வருவதால், யாதவர் சமுதாய மக்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்கலாம் என நினைக்கிறோம். திருச்சியில் இருந்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளோம் என இளங்கோ யாதவ் கூறினார். 

தலைப்புச்செய்திகள்