Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 59க்கு மேல் நீட்டிக்க கூடாது: தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு

பிப்ரவரி 28, 2021 12:25

சென்னை: தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜெயந்தி கூறியதாவது:  டெல்லியில் பல மாதங்களாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்று அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்.  

பொதுத்துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். தமிழ்நாடு மின் வாரியத்தில்  G.O 100 dt 19.10.2010 படி முத்தரப்பு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு பணி உறுதி செய்ய வேண்டும்.

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும்  சூழலில் அரசு பணியில் பணிபுரியும் அலுவலர்களின் வயதை எக்காரணத்தை கொண்டும் 59 வயதுக்கு மேல் நீட்டிப்பு செய்ய கூடாது
தமிழக அரசில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் குழுவால் பரிந்துரை செய்த ஏழாவது ஊதியம் நிர்ணயம்  செய்யவும், பல ஆண்டுகளாக பணி புரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

தமிழக அரசுக்கு வளம் சேர்க்கும் வகையில் பொறியாளர்  சீர்த்திருத்தம் ஆணையத்தைப் பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் அமைக்கவும், அரசு பணியில் உள்ளவர்களை உரிய விசாரணையின்றி தற்காலிக  பணி நீக்கம் செய்யக்கூடாது.  உரிய விசாரணைக்கே பிறகே அதற்கான நடவைக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்