Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. 180 தொகுதிகளில் போட்டியிட வியூகம்

பிப்ரவரி 28, 2021 01:11

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி வருகிறது.இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரான துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் கையெழுத்திட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று பா.ஜனதா கட்சியுடன் ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பா.ஜனதாவுக்கு 18 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முடிந்ததும் அடுத்ததாக தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு வருகிறது. ஆனாலும் அ.தி.மு.க. 180 இடங்களில் போட்டியிட முடிவு செய்து அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது பற்றி தொடர்ந்து பேசி வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டுமானால் 180 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் தனி மெஜாரிட்டிக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. கருதுகிறது.

தலைப்புச்செய்திகள்