Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. சொல்லும் திட்டங்களை பழனிசாமி அறிவிக்கிறார்-கனிமொழி

பிப்ரவரி 28, 2021 01:13

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது,தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவி சுகத்திற்காகடெல்லியில் உள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் தமிழகத்தின் மொழி, உரிமை, பெருமை, மற்றும் அ.தி.மு.க. கட்சி, ஆகியவற்றை அடகு வைத்துள்ளார். அ.தி.மு.க. கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை வேண்டுமானாலும் நீக்க வேண்டுமானாலும் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் தான் முடிவு செய்வார்கள்.

இந்த அரசு பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் பினாமி ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. தன்மானத்தை சுயமரியாதை இழந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எனவே இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.தமிழகத்தில் புதிதாக எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. இதனால் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 23 லட்சம் பேர் படித்து வேலை இல்லாமல் உள்ளனர்.

மேலும் பலர் வேலை இழந்துள்ளனர் பதவி சுகத்திற்காக மத்தியில் எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்கிற ஒரு கட்சியாக அ.தி.மு.க. அரசு உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களைக் கொண்டு வந்தார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்த அரசு ஆதரவு தெரிவித்தது.

தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அது தனக்கு என்ன லாபம் இருக்கிறது என்பதை எண்ணி தான் அந்தத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க. அரசு 5 லட்சம் கோடிக்கு கடன் வாங்கி உள்ளார்கள்.

அதற்கு வட்டி மட்டும் ரூ.2 லட்சம் கோடி கட்ட வேண்டும். எதற்காக கடன் வாங்குகிறார்கள் பயனுள்ள திட்டத்திற்காக அல்ல. சாலை திட்டங்கள் அதற்காக அதிக அளவில் கடன் வாங்குகிறார்கள்.ஆனால் எங்கும் சாலைகள் போடவில்லை எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக தரமற்ற சாலை இருக்கிறது.தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அதனை அறிவித்து வருகிறார் என்று கனிமொழி கூறினார்.

தலைப்புச்செய்திகள்