Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு

மார்ச் 03, 2021 11:50

சென்னை, மார்ச் 4: ஏழை மக்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்த அடிப்படையில் நகைக்கடன் நிலுவை பட்டியலை அனுப்புமாறு அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது பின்னர் அரசாணையாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது நகைக்கடன்களை தள்ளுபடி செய்யும் முனைப்பில் அரசு இறங்கியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் என்றை அனுப்பியுள்ளார். அதில் இத்துடன் அனுப்பியுள்ள எக்‌ஷல் படிவத்தில் ஜனவரி 31 வரையிலான நகைக்கடன் விவரங்களை அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் இணைப்பதிவாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

“தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள்,

தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் உரிய படிவத்தில் குறுந்தகட்டில் பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்