Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஊசி

மார்ச் 03, 2021 02:32

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இரண்டு நாட்களில் 146 பேருக்கு, கொரோனா தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தோற்று நோயை முற்றிலும் தடுத்திடும் நோக்கத்தில், நாடுமுழுவதும்   கொரோனா தொற்று தடுப்பூசி  போடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்,

அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கடந்த இரண்டு தினங்களாக, மொத்தம் 146 பேருக்கு, இந்த ஊசி போடப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரையிலும் ஊசிபோடும் பணிகள் நடைபெற்றன. தடுப்பு ஊசி போடப்பட்ட அனைவரும், முப்பது நிமிடங்களுக்கு, தனி அறைகளில் உட்கார வைக்கப்பட்டு, பின் விளைவுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, அவரவர் பணியிடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.  கொக்கிரகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள், ஊசிபோடும் பணிகளில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்