Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தாதான் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய தடையாக உள்ளார்: பிரதமர் மோடி

ஏப்ரல் 07, 2019 10:02

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் மம்தா ராணுவ நடவடிக்கைக்கு எதிராக இருக்கிறார். நமது தாயகத்தை மம்தா மதிக்க தவறிவிட்டார். எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு மம்தா துணைபோகிறார். இந்தியாவை துண்டாடும் முயற்சிக்கு மம்தா துணைபோகிறார். 

மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார். தற்போது பா.ஜ.,வுக்கு ஆதரவான அலையால் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டது. சாரதா சிட்பண்ட் ஊழல் நடந்துள்ளது. இதற்கு மம்தா துணைபோகிறார். இந்த மாநிலத்தில் ஏற்பட்ட ஊழல்கள் குறித்து இம்மக்கள் அறிவர். இந்த மாநிலத்தை காவலாளியான நான் காப்பேன் என தெரிவித்தார். 
 

தலைப்புச்செய்திகள்