Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெற்றி சினிமாஸ் திரையரங்கில் வருமான வரியினரின் அதிரடி சோதனை 

மார்ச் 03, 2021 02:59

தேனி  : தேனி மற்றும் போடிநாயக்கனூரில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்குகளில் வருமாணவரித் துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்குகள் உள்ளது. இதில் தேனி பழனிச்செட்டிபட்டியில் உள்ள வெற்றி சினிமாஸில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

வருமான வரி கணக்குகளை சரிவர தாக்கல் செய்யாமல் இருந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து வருமான வரித்துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக 5பேர் கொண்ட குழுவாக  தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.உரிமையாளர் வெற்றிவேல், உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனின் சகோதரர். மகேந்திரன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி  அமமுக மாநில அமைப்பு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இதுவரை பணம் ஏதும் கைபற்றப்படவில்லை எனவும் சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்