Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டசபை தேர்தல்- 20 பொதுக்கூட்டங்களில் மோடி பிரசாரம்

மார்ச் 04, 2021 07:53

கொல்கத்தா:294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.இங்கு மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இதேபோல 3-வது அணியாக இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.“மி‌ஷன் மேற்கு வங்காளம்” என்ற பெயரில் அங்கு ஆட்சியை வெல்லும் நோக்கத்தில் பா.ஜனதா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தலைவர்கள் பட்டாளத்தையே அங்கு அனுப்பி வைத்துள்ளது.

மம்தா கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமீப காலமாக அதிக அளவில் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

வருகிற 7-ந்தேதி முதல் அவரது பிரசாரம் தொடங்கும். ஏற்கனவே மோடி மேற்கு வங்காளத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து ஆதரவு திரட்டி இருந்தார். இதேபோல மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அங்கு தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்