Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரைக்காலில் புதிதாக 71 வாக்குச்சாவடிகள்- தேர்தல் அதிகாரி தகவல்

மார்ச் 04, 2021 12:50

காரைக்கால்: தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றோம்.

அதன் ஒரு கட்டமாக காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களிடையே வினியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைத்து மக்களிடையே வினியோகம் செய்யும் நடைமுறையினை தொடங்கி வைத்துள்ளோம். மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் சேர்த்து 9 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதற்காக 15 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு குழுக்களாக பிரிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியார் கட்டிட சுவர்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனாவை கருத்தில் கொண்டு, புதிதாக 71 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தி மொத்தம் 234 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்கலாம்  என்று கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்