Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி-அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் அனுமதி

மார்ச் 04, 2021 02:24

புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ மனைகளும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்ய திட்டம், மத்திய அரசின் சுகாதாரத் திட்டம், மாநில மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் ஆகிய வற்றின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ மனைகள், கரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தலாம்.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த தனியார் மருத்துவமனைகளை அடை யாளம் கண்டு, அவற்றை தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட மூன்று திட்டங்களின் கீழ் வராத தனியார் மருத்துவமனைகளாக இருந்தா லும், தங்களிடம் போதிய அளவு தடுப்பூசி செலுத்தும் ஊழியர்கள், தடுப்பூசிகளை பத்திரப் படுத்தும் வசதி, பக்க விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் ஆகியவை இருக்கும் பட்சத்தில், அந்த மருத்துவமனைகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்