Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 05, 2021 03:44

கொல்கத்தா:294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன.இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். அவர் கூறியதாவது;

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். திரிணாமுல்  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 50 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சமூகத்தை சேர்ந்த 42 பேர், 17 பழங்குடியினருக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்