Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொகுதி ஒதுக்கீட்டில் கவலையோ, சந்தோ‌ஷமோ இல்லை- எல்.முருகன்

மார்ச் 06, 2021 07:57

திருச்சி:தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.இதில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்தது. முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்தநிலையில் திருச்செந்தூரில் இருந்து திருவண்ணாமாலை செல்லும் வழியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று அதிகாலை திருச்சி வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது;எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருக்கிறோம். அதிகபடியான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற
இலக்கில் சென்று கொண்டிருக்கிறோம்.இது தேர்தல் கூட்டணி.

எல்லோரும் இணைந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவலைப்படுவதற்கோ,
சந்தோ‌ஷப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு இருக்கும். எங்களை பொருத்தமட்டில் ஜெயிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும்.என்று முருகன் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்