Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் சிறுபான்மையினர் மீது பாக்கிஸ்தான் தாக்குதல்

மார்ச் 06, 2021 08:05

ஜெனீவா:மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ் என்பவர் ஐ.நா. அமைப்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இந்து சிறுபான்மையோர் சமூகத்திற்கு அச்சம் ஏற்படுத்துவதற்காக அவர்கள்மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன. ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் மற்றும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில், இளைஞர் ஒருவர் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஏனெனில், காஷ்மீரில் முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்தில் சேராத அந்த இளைஞர் தனது வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்டுவதற்காக அப்பகுதியில் வசித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தாபா உரிமையாளர் ஒருவரது மகன் ஸ்ரீநகரில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளானார்.  இதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று உயிரிழந்துவிட்டார்.ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2
நாள் பயணமாக வெளிநாட்டு தூதர்கள் அடங்கிய குழு வந்தபொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்