Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸார் தர்ணா-சட்டசபை முடங்கியது

மார்ச் 06, 2021 08:09

பெங்களூரு :கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.முதல் 2 நாட்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்றும், 8-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளில் காங்கிரஸ் உறுப்பினர்கள்,
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த தர்ணா போராட்டத்தின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர் சங்கமேஸ்வர் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்ணா போராட்டத்தால் நேற்று முன்தினம் சபை நாள் முழுவதும் முடங்கியது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். சபாநாயகர் இருக்கையின் முன்பகுதியில் அவர்கள் கூடி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய சபாநாயகர், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விவாதம் தொடங்குவதாக அறிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதத்திற்கு நாங்கள் எக்காரணம் கொண்டும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்.

மேலும் எங்கள் கட்சி உறுப்பினர் சங்கமேஸ்வர் மீது மோசமான முறையில் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை உடனே வாபஸ்
பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 2-வது நாளாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைள் முடங்கின.

தலைப்புச்செய்திகள்