Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்

மார்ச் 06, 2021 12:32

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த உதயநிதியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. அதனையடுத்து பிப்ரவரி 28-ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது.விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த ஸ்டாலினிடம், துரைமுருகன் நேர்காணல் நடத்தினார்.திமுக தலைவரே நேரடியாகப் போட்டியிடும் தொகுதி என்பதால், பிரதான கட்சியான அதிமுகவில் யார் களமிறக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதேபோன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விருப்ப மனு அளித்தார்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி இரண்டு தொகுதிகளாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டது. 2011 தேர்தலில் ஒரு தொகுதியாய் மாறிப் போனது.  அத்தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் திமுக சார்பில் மறைந்த ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில், உதயநிதி அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.அவரிடம், நேரடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்