Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரபல நகைக்கடையில் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு

மார்ச் 07, 2021 12:08

சென்னை:சென்னையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 4-ந்தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது.மதுரை, கோவை, திருச்சி, கேரள மாநிலம் திருச்சூர், ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் இந்த சோதனை நடந்தது.இதில் கணக்கில் வராத வருவாய் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்இந்தியாவின் மிகப்பெரிய நகைக்கடையாக விளங்கும் கடையில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளது. கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கடன் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைக்கடை சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஆவணங்களும் போலியானதாக உள்ளது.ரூ.1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ.1.2 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையிலும் நகைக்கடை சார்பில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நகைகளை வாங்கியது தொடர்பான ஆவணங்களும் சரியானதாக இல்லை. நகை விற்பனையில் முறையாக நடந்து கொள்ளாமல் பல்வேறு முறைகேடுகளில் நகைக்கடை ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்