Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறக்கும் படை 24 மணிநேரமும் கண்காணிப்பில் உள்ளது - ஆட்சியர் 

மார்ச் 07, 2021 01:19

தூத்துக்குடி : பெட்ரோல் பங்கில் உள்ள பிரதமர் படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பேட்டியளித்தார்.தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது இதையொட்டி  100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வரும் பொதுமக்களுக்கு வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வாக்கு இயந்திரம் விவிபேட் மூலம் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் செய்தியாளரிடம் கூறும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வாகன சோதனையில் இதுவரை 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் பெட்ரோல் பங்கில் உள்ள பாரதப்பிரதமர் படம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி விளம்பரங்களும் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என  தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்