Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு ஆலை உரிமையாளரிடம் ரூ.93 ஆயிரம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை 

மார்ச் 07, 2021 01:37

விருதுநகர் : பட்டாசு ஆலை உரிமையாளரிடம் இருந்து ஆவணம் இல்லாத 93 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  தற்போது தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த காலத்தில் உரிய ஆவணம் இன்றி  50 ஆயிரத்திற்கு மேல் பணம்  மற்றும்பரிசுப் பொருட்களை கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இவற்றைக் கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு நிலை  கண்காணிப்புக்குழு பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று  விருதுநகர் அருகே காமராஜபுரம் பகுதியில்  தாசில்தார் சுப்பிரமணியம் தலைமையிலான பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன 
சோதனையில் ஈடுபட்டிருந்த போது RR நகர் பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வரும் பாலாஜி என்பவர் சென்ற  காரை சோதனை செய்தனர்.

அதில் முறையான ஆவணம் இன்றி ரூபாய் 93 ஆயிரம் ரொக்க பணத்தை பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்துள்ளார். உரிய ஆவணம் இல்லாத இந்த ரொக்கப் பணத்தை தேர்தல் கண்காணிப்புக்  குழுவினர்பறிமுதல் செய்து  விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் ஜீவஜோதியிடம்    ஒப்படைத்தனர். ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் பாலாஜியிடம் அறிவுறுத்தி அனுப்பினர்.

தலைப்புச்செய்திகள்