Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி பள்ளிகளுக்கு தனி கல்வி வாரியம்: அர்விந்த் கெஜ்ரிவால் 

மார்ச் 07, 2021 02:11

புதுடெல்லி, மார்ச்.8: டெல்லியில் அமைந்துள்ள 2,700 பள்ளிகளுக்காக தனி கல்வி வாரியம் அமைக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:டெல்லியில் தற்போது 1,000அரசு பள்ளிகளும், 1,700 தனியார்பள்ளிகளும் உள்ளன. இவை அனைத்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் அமைந்துள்ள 2,700 பள்ளிகளுக் காக டெல்லி கல்வி வாரியம் (டிபிஎஸ்இ) என தனி வாரியம் அமைப்பதற்கு அசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடக்கத்தில் 21 முதல் 22 அரசு பள்ளிகள் வரை இந்த வாரியத்தில் இணைக்கப் படும். அடுத்த 4 ஆண்டுகளில் மீதமுள்ள அனைத்து பள்ளிகளும் வாரியத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
இந்த தனி கல்வி வாரியத்துக்கு டெல்லி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு அமைக்கப்படும்.

மேலும் தலைமைச் செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு ஒன்றும் அமைத்து கண்காணிக்கப்படும்.மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான தரம், உயர் தொழில்நுட்ப முறைகள் கற்றுத் தருவதற்கு வசதியாக இந்த வாரியம் செயல்படும். மாணவர்களின் திறனுக்கேற்ப கல்வியை வழங்க கல்வி வாரியம் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்