Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

15ம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை

மார்ச் 07, 2021 02:16

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில், வரும், 15 முதல், நேரடியாக விசாரணை நடக்க உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு மார்ச் இறுதியிலிருந்து, நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது. 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவே, வழக்குகளை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.'கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை துவக்கப்பட வேண்டும்' என, வழக்கறிஞர் சங்கங்கள் வலியுறுத்தின.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், வரும், 15 முதல், வாரத்தில் மூன்று நாட்களில் மட்டும், நேரடி விசாரணை நடக்க உள்ளது.உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணையை, சோதனை அடிப்படையில் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 15 முதல், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நேரடி விசாரணை நடத்தப்படும். மற்ற இரண்டு நாட்களில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக விசாரிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்