Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலில் கிடந்த கேன்  திரவியத்தை அருந்திய மீனவர் உயிரிழப்பு 

மார்ச் 07, 2021 03:04

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் மீன்பிடிக்கும் போது கடலில் மிதந்து வந்த கேனில் இருந்த திரவியத்தை அருந்திய பாம்பன் மீனவர் அந்தோணி உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில்  வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பது வழக்கமாக உள்ளது .இந்த சூழ்நிலையில் பாம்பனை சேர்ந்த 6 மீனவர்கள்  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 

கோடியக்கரை தென்கிழக்கு கடலில் 15 நாட்டிகல் மீன் பிடித்துக் கொண்டு கோடியக்கரைக்கு திரும்பும்போது இன்று அதிகாலை 2 மணி அளவில் மீன் வகைகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது வலையில்  3 லிட்டர் கேன் ஓன்று சிக்கியுள்ளது. அதில் சாராய வாடை வருவதை கண்ட அந்தோணி, போஸ், வினோத் ஆகிய மூவரும் குடித்துவிட்டு மூவரும் தூங்கி விட்டனர். 

காலை 5 மணி அளவில் தூங்கியவர்களை  எழுப்பியபோது  அந்தோணி இறந்தது தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
இதில் அந்தோணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும்  இருவர் ஆபத்தான நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது கோடியக்கரை வனத்துறையினர் வேதாரண்யம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்