Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு - திருச்சியில் நடைபெற்றது

மார்ச் 07, 2021 03:07

திருச்சி : கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை அடிப்படையாகக்கொண்டு கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மகாத்மா கண் மருத்துவமனையின் கண் அழுத்த நோய் மருத்துவர் பிரசன்னா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமை கண் நீர் அழுத்த நோய் நிபுணர் வினோத் அருணாச்சலம் கலந்து கொண்டு முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து மருத்துவர் பிரசன்னா வெங்கடேசன் கூறுகையில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 13 வரை நடைபெறும் எனவும்,  30 வயது முதல் 35 வயது மேற்பட்டவர்களுக்கு இந்த கண் நீர் அழுத்த நோய் தென்பட ஆரம்பமாகிறது,

ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு இருந்தால் குடும்பத்துடன் அனைவரும் கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது எனவும், கண் நீர் அழுத்த நோய் இரண்டு பிரிவுகளாக உள்ளது, அதற்காக மகாத்மா கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை, கருவிழி தடிமன் பரிசோதனை, சுற்றளவு பார்வை பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

பரிசோதனை முகாமில் 231 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர், கண் நீர் அழுத்த நோய் நிர்ணயம் செய்யப்பட்ட அவர்களுக்கு இலவச சொட்டு மருந்து வழங்கப்படுகிறது என்றும்  தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்