Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சிறுவர் சிறுமியர் கோரிக்கை முழக்க பேரணி

மார்ச் 08, 2021 03:12

திருநெல்வேலி  : ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, தமிழகத்திலேயே முதன் முதலாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் மேலப்பாளையத்தில், சிறுவர் சிறுமியர் 1000 பேர் பங்கேற்ற, கோரிக்கை முழக்க பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் மேலப்பாளையத்தில், அண்மைக்காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில், கடைவீதிகளில், பொதுப்பயன்பாட்டுக்கு உரிய இடங்களில் இந்த  ஆக்கிரமிப்புகளுக்கு அதிக அளவாக காணப்படுகிறது.

இத்தகைய ஆக்கிரமிப்புகளினால், அவசர தேவைக்குரிய தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ் ஊர்திகள், குடிநீர் லாரிகள், போர் எந்திர லாரிகள் உள்ளிட்ட எந்தவொரு இலகுரக வாகனங்களும், கனரக வாகனங்களும், ஊருக்குள்  வரமுடிவதில்லை. இதனால் வீண் காலவிரையமும், சில நேரங்களில் உயிர் இழப்புகளும் கூட, ஏற்படுகின்றன.  இறந்தவர்களின் உடல்களை அடக்கஸ்தலத்துக்கு கொண்டு செல்லுவதிலும் சிரமம் உண்டாகிறது. இத்தகைய காரணங்களினால், ஆங்காங்கே இருக்கின்ற,

அனைத்து ஆக்கிரமிப்புகளையும், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம்,  உடனடியாக தலையிட்டு, அப்புறப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மூலன் அகமது பிள்ளை தெரு, காயிதேமில்லத் தெரு மற்றும் வெள்ளை கலீபா சாகிப் தெரு ஆகிய, முத்தெருக்கள் ஜமாஅத் சார்பில் சிறுவர், சிறுமியர் மொத்தம் 1000 பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி  மேலப்பாளையத்தில்,  நடைபெற்றது. பேரணியின் போது,

கோரிக்கைகளின் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் உள்ளபடியே  பேரணியினர் வந்தனர். புதுமனை கொத்பா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி  தலைவர் டி.கே.அப்துல் காதர், இந்த பேரணியை, வெள்ளை கொடி அசைத்து,  துவக்கி வைத்தார். பொருளாளர் அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார். கமிட்டி உறுப்பினர்கள் முகம்மது மைதீன், மகபூப் அலி, குலாம் முகம்மது மற்றும்   ரிபாய் ரஷாதி  உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்