Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி

மார்ச் 08, 2021 03:41

ராமநாதபுரம் :  நான்கு சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி ராமநாதபுர ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமையில்,  ராமநாதபுரம்,பரமக்குடி (தனி), திருவாடானை,

முதுகுளத்தூர் ஆகிய  நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையே ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கணினி முறை ஒதுக்கீடு பணிகள் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்ள் ஒதுக்கீட்டு பணியில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களும், அனைத்து  அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்