Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்ச் 08, 2021 03:56

பெரம்பலூர் : சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் ஏப் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்ட மன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து 100% வாக்களிக்க வேண்டும்  வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.மேலும் மார்ச் 8ம் தேதியான இன்று உலக மகளிர்  தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆட்சியரகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.   இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்