Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மொழிக்காக பாடுபட்ட சான்றோர்களுக்காக அருங்காட்சியகம்

மார்ச் 09, 2021 01:59

திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில், 25 லட்ச ரூபாய் மதிப்பில் தனியார்  திறந்தவெளி அருங்காட்சியகத்தை இந்திய் கம்யூனிஸ்ட் கட்சியின், மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைக்க உள்ளார்.சென்னை அரசு ஓவியக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கவின் நுண்கலை கல்லூரியின் நிறுவனருமான, ஓவியர் குரு.சந்துரு மற்றும் அவருடைய மாணவர்கள் ஒருங்கிணைந்து,

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள, சின்ன சங்கரன் கோவிலில் தாமிரபரணி நதிக்கரையில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், 25 லட்ச ரூபாய் மதிப்பில்,  திறந்தவெளி  அருங்காட்சியகம் ஒன்றை புதிதாக, உருவாக்கி வருகின்றனர். அதில் மொழிக்காகவும், சமுதாயத்துக்காகவும் பாடுபட்ட சான்றோர்களின்,

சிற்பங்கள் உட்பட, பல்வேறு அம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருக்கும்.  முதற்கட்டமாக, 30 பேர்களின் சிற்பங்களுடன்  ஆரம்பிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணு, வரும்  20- ஆம் தேதி திறந்து வைக்கிறார் என, திருநெல்வேலி  குருவனம் அமைப்பின் செயலாளர் ஆர். நல்லையாராஜ், தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்