Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாகன சோதனையில் பைக்கில் எடுத்துவரப்பட்ட  ரூ.2,77,000 பறிமுதல்

மார்ச் 09, 2021 02:01

தூத்துக்குடி : கடற்கரை சாலையில் உரிய அனுமதியின்றி  இரு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணத்தை  தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல்  நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால்  உரிய ஆவணம் இன்றி 40,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது,

பரிசுப் பொருட்கள் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக இரண்டு கேரள பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சோதனையிட்டபோது ஒரு வாகனத்தில் 77 ஆயிரம் ரூபாயும் மற்றொரு வாகனத்தில் இரண்டு லட்சம் ரூபாயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

தலைப்புச்செய்திகள்