Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லைக்கு 2ம் கட்டமாக மத்திய‌ துணை பாதுகாப்பு படை வருகை

மார்ச் 09, 2021 02:02

திருநெல்வேலி : தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக, இரண்டாம் கட்டமாக மத்திய‌ துணை பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் மாதம், 6ஆம் தேதி நடைபெறவுள்ள சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்ட,  தேர்தல்  பாதுகாப்பு பணிகளுக்காக, அஸ்ஸாம் மாநிலத்தின்,  406-ஆவது பட்டாலியனை சேர்ந்த,   மத்திய துணை ராணுவ   படையின், 84 பேர்  சென்ற மாதம்  உதவி கமாண்டர் நரேந்திரன் தலைமையில்,  திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அதனை தொடர்ந்து, தேர்தல்  பாதுகாப்பு பணிகளை, இன்னும்  பலப்படுத்துவதற்காக,   ஒடிசா மாநிலத்தின், 151-ஆவது  பட்டாலியனை சேர்ந்த,   மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் 84 பேர்,  உதவி தளவாய் ராக்கேஷ் குமார் தலைமையில்,  திருநெல்வேலி வந்து, சேர்ந்தனர்.  உதவி தளவாய் ராகேஷ் குமாருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நெ.மணிவண்ணன் உத்தரவுபடி, மாவட்ட‌ காவல்துறை சார்பில், பாளையங்கோட்டை  ஆயுதப்படை வளாகத்தில்,ஆயுதப்படை ஆய்வாளர்  மரிய கிளாஸ்டன் ஜோஸ்  பொன்னாடை அணிவித்து, கவுரவித்தார். 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு  இரண்டாவது கட்டமாக, வந்து சேர்ந்துள்ள, மத்திய எல்லை பாதுகாப்பு  படையினர், உட்கோட்ட வாரியாக பிரிக்கப்பட்டு,  பதற்றமான பகுதிகளில்,  பாதுகாப்பு பணிகளுக்காக, அனுப்பி வைக்கப்படுவார்கள்  என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்