Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வண்ண கோலங்கள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்ச் 09, 2021 02:04

தேனி : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 நடைபெறவுள்ளதையொட்டி , தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்திடும் பொருட்டு , தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்ன குயிக் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் வரையபட்டிருந்த , வண்ண கோலங்கள் விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு . ஹெச் , கிருஷ்ணனுண்ணி , இ.ஆ.ப. , அவர்கள் துவக்கி வைத்து , பார்வையிட்டார் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் , பெரியகுளம் சார் ஆட்சியர் தி.சிநேகா , இ.ஆ.ப. , மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்

தலைப்புச்செய்திகள்