Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கையாக 516 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

மார்ச் 09, 2021 02:19

தூத்துக்குடி : சட்டமன்றத் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக 516 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்தநிலையில் தூத்துக்குடி மாநகரில் மீனவ பகுதியில் துணை ராணுவம் மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிலுவைபட்டியில் துவங்கி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட கடற்கரை  வழியாக திரேஸ்புரம் வந்தடைந்தது. இந்த கொடி அணிவகுப்பில் டிஎஸ்பி கணேஷ் ஆய்வாளர்கள் அருள்,   ஜெயந்தி, உதவி ஆய்வாளர் சேவியர் உள்ளிட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் இருந்து 516 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டவிரோதமாக செயல்பட்ட 37 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தெரிவித்தார். மேலும் 1,280 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்