Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நமது வாக்கு நமது உரிமை நடித்துக்காட்டி அசத்திய மாணவிகள்

மார்ச் 09, 2021 02:31

திருப்பத்தூர்  : நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை என  நடித்துக் காட்டி கல்லூரி மாணவ மாணவிகள் அசத்தினர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தி நமது வாக்கு நமது உரிமை , வாக்களிப்பது நமது கடமை எனது வாக்கு விற்பனைக்கு அல்ல  என்கிற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் நடித்து  காட்டினர்.

கந்திலி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு திருவள்ளுவர்பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல் மற்றும் கையெழுத்து இயக்கம்  சார் ஆட்சியர் வந்தனா கர்க் தலைமையில் நடைபெற்றது.  இறுதியில் சார் ஆட்சியர் வந்தனா கர்க் முதல் கையெழுத்து இட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

சார் ஆட்சியர் வந்தனா கர்க் கல்லூரி மாணவ மாணவிகளிடையே கூறுகையில்...  100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் வாக்குகள் விற்பனைக்கல்ல என்று வலியுறுத்தி அச்சமின்றி 100% வாக்களியுங்கள். அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று 100 சதவிகித வாக்கை பதிவிடுங்கள் என கேட்டுக்கொண்டார். இறுதியில் வாக்களிப்பது குறித்து வாக்கு எந்திரத்தை கொண்டு ஒத்திகை நடைபெற்றது. இதில்  200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்

தலைப்புச்செய்திகள்