Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் காவலர்கள் அச்சமின்றி தடுப்பூசி போட ஆலோசனை

மார்ச் 09, 2021 02:33

தூத்துக்குடி : தேர்தலில் பணியாற்றும் காவல்துறையினர் அச்சமின்றி கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 2800 காவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அச்சமின்றி போடுவதற்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் பணியாற்றும் அனைத்து காவலர்களும் கொரோனா தடுப்பூசி அச்சமின்றி போட்டுக் கொள்வதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சம் ஏதும் இருந்தால் மருத்துவர்களிடம் கேட்டு அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசும்போது,  மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 2800 போலீஸாரில் 900 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களுக்கு இன்னும் சில தினங்களில்  தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்ற வந்துள்ள துணை இராணுவத்திற்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்டம் தடுப்பூசி விரைவில் போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

தலைப்புச்செய்திகள்