Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகளிர் சுய உதவிக்குழுவினரின்  விழிப்புணர்வு கோலம் - ஆட்சியர் வாழ்த்து

மார்ச் 09, 2021 02:38

பெரம்பலூர் :  வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில்   மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் வில்லைகள்  ஒட்டுதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதனை அடுத்து பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து வரையப்பட்ட பிரமாண்ட கோலத்தை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு வாழ்த்து  தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் வழங்கும்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான பத்மஜா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ராஜமோகன், நகராட்சி ஆணையர் குமரி மன்னன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காமராஜ், வட்டாட்சியர் சின்னதுரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தலைப்புச்செய்திகள்