Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

மார்ச் 09, 2021 03:06

நாகை :, வேதாரண்யம் கடலோரப் பகுதியில் அரிய வகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முட்டைகளை செயற்கை முறை பொரிப்பகத்தில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது .  இதையடுத்து , நிகழாண்டு பருவத்தில் இதுவரை இங்கு 6,259 முட்டைகள் சேகரிக்கப்பட்டு , செயற்கைமுறை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரிய வகை கடல் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இனப் பெருக்கத்துக்காக கோடியக்கரை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிடுகின்றன.

அந்த முட்டைகளிலிருந்து சுமார் 41 நாள்களுக்குப் பிறகு குஞ்சுகள் வெளிவந்து, தானாகவே கடலுக்குள் சென்றுவிடும்.இந்த முட்டைகள் செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச் செய்து கடல் ஆமை இனங்கள் வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான பருவம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 48 முட்டைகள் சேகரிக்கப்பட்டன.

மேலும்  கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு உள்ளிட்ட இடங்களில் வனத்துறையினர் கடந்த சில வாரங்களில் 57 ஆமைகள் வெவ்வேறு நாள்களில் இட்ட 6,259 முட்டைகள் கோடியக்கரை பொரிப்பக்ததில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் கடலில் விடப்படும் என கோடியக்கரை வனச் சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்