Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலை வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.4 லட்சம் மோசடி

மார்ச் 10, 2021 12:42

கடலூர்  : மாற்றுத்திறனாளியிடம் வேலை வாங்கி தருவதாக 4 லட்சம் மோசடி செய்தவர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஏமாற்றம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் புகார் மனு அளித்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன்  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது அங்கிருந்த மற்றொரு மாற்றுத்திறனாளி சரவணன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

 இதன் தொடர்ச்சியாக கொளஞ்சியப்பன் மகள் சிவகாம சுந்தரிக்கு சத்துணவு பணியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி சரவணன் 4 லட்ச ரூபாய் பெற்று இதுவரை வேலையும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் தன்னிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் புகார் மனு அளித்தார்.

இதேபோல சரவணன் பண்ருட்டியை சேர்ந்த புவனேஸ்வரியிடம் ரூபாய் 20000 ஆயிரமும், ஸ்ரீமுஷ்ணத்தை  சேர்ந்த மைதிலி என்பவரிடமிருந்து  60,000 ஆயிரம் ரூபாயும் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது  தெரியவந்துள்ளது. விசாரணையில் மாற்றுத்திறனாளி சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நபர்களிடம் பேச்சு கொடுத்து அரசு வேலை வாங்கித் தருவதாக  கூறி மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்